/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.6 கோடியில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்க நிலத்தடி மின் இணைப்பு: மன்ற கூட்டத்தில் துணை தலைவர் தகவல்
/
ரூ.6 கோடியில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்க நிலத்தடி மின் இணைப்பு: மன்ற கூட்டத்தில் துணை தலைவர் தகவல்
ரூ.6 கோடியில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்க நிலத்தடி மின் இணைப்பு: மன்ற கூட்டத்தில் துணை தலைவர் தகவல்
ரூ.6 கோடியில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்க நிலத்தடி மின் இணைப்பு: மன்ற கூட்டத்தில் துணை தலைவர் தகவல்
ADDED : அக் 30, 2025 10:56 PM

ஊட்டி:  மழை சமயங்களில் ஊட்டி ரயில் நிலைய பாலம் பகுதியில் தண்ணீர் தேங்குவதால், மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஊட்டி நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் கணேசன், துணைத்தலைவர் ரவிக்குமார்  முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் முஸ்தபா கூறுகையில், மார்க்கெட் கடைகளுக்கு தகர கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, கடைகளுக்கு தரமான கூரை அமைக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில், கடைகளுக்கு, 3 வைப்புத்தொகை கோரப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. கடை வாடகை நிர்ணயிக்கப்பட்ட பின்னர் தான் வைப்புத் தொகை கோர முடியும்' என்றார்.
வருவாய் அலுவலர் நஞ்சுண்டன், வைப்புத்தொகை குறித்து அரசு வழிகாட்டுதல் படி வசூலிக்கப்படும்' என்றார்.
கவுன்சிலர் ஜார்ஜ் கூறுகையில், ஊட்டி ரயில் நிலைய பாலம் பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. இதற்கு நிரந்திர தீர்வு காணும் வகையில் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ரூ. 6 கோடியில் நிலத்தடி மின் இணைப்பு கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்கு தேவையான  அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.
துணை தலைவர் ரவிகுமார் பேசுகையில்,  'ஊட்டி நகருக்கு தண்ணீர் வினியோகிக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தில் உள்ள நீரேற்று மையத்துக்கு நிலத்தடி மின் இணைப்பு வழங்க, 6 கோடி ரூபாயில்  பணிகள் நடந்து வருகின்றன. வனப்பகுதியில் மட்டுமே கேபிள் பதிக்க வேண்டும் இதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக, 38 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. குடிநீருக்கான திட்டம் என்பதால் இந்த கட்டணத்தை மின் வாரியமே செலுத்த மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதனால், இரண்டு மாதங்களில் மின் கேபிள்கள் பதிக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படும். நகராட்சி பிளம்பர்கள் செயல்பாடுகளால் நகரில் செயற்கை தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதை முறைப்படுத்த வேண்டும். குப்பைகளை அகற்றி நகரத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.'' என்றார்.
இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள தெரு நாய் தொல்லை, குடிநீர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

