/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் படைப்புகள் கண்காட்சி பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
/
அறிவியல் படைப்புகள் கண்காட்சி பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
அறிவியல் படைப்புகள் கண்காட்சி பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
அறிவியல் படைப்புகள் கண்காட்சி பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 22, 2024 11:26 PM

பந்தலூர்:பந்தலூர் அருகே, அம்பலமூலா பகுதியில் பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு சேவை வழி கற்றல் முகாம்களை சென்னையில் இயங்கி வரும் கிறிஸ்தவ கல்லூரியின் வேதியியல் துறையினர் நடத்தி வருகின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டிற்கான முகாம், நேற்று காலை அம்பலமூலாபகுதியில் செயல்படும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
கல்லூரி முனைவர் விஜய் சாலமோன் தலைமை வகித்து பேசுகையில், ''மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மாணவர்கள் இயற்கையாகவே, அறிவுத்திறன் மற்றும் நினைவாற்றலை கொண்டுள்ளவர்களாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் இவை தெளிவாக தெரிகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையிலும், கணிதம், அறிவியல், உயிரியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும், செயல்முறை பயிற்சியுடன் கூடிய கண்காட்சி நடத்தப்படது.'' என்றார்
மாணவர்களுக்கான அறிவியல் படைப்புகளை உருவாக்கும் விதங்கள் மற்றும் அறிவியல் கண்காட்சிகளை நடத்தினார்கள்.
இந்த முகாமில் வேதியியல் துறையை சேர்ந்த 30 மாணவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
ஆதிவாசிகள் நலச்சங்க மேலாளர் ஜான், ஒருங்கிணைப்பாளர் சந்திரன், கல்லூரி மாணவர்கள் பிரபு, அமிர்தவல்லி உட்பட பலர் பங்கேற்றனர்.