எல்லையில் நடந்த சோதனை கட்சி கொடி, தொப்பி பறிமுதல்
எல்லையில் நடந்த சோதனை கட்சி கொடி, தொப்பி பறிமுதல்
ADDED : மார் 17, 2026 06:27 AM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே எல்லையில் நடந்த சோதனையில் கட்சி கொடிகள், தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பந்தலுாரில் சோலாடி, தாளூர், மணல் வயல், கக்குண்டி, கோட்டூர், பூலகுண்டு, நம்பியார்குன்னு, மதுவந்தால், பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகள் உள்ளன.
இப்பகுதிகளில், நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுப்ரமணி தலைமையில் வாகன சோதனை நடந்தது.
அப்போது, கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்ததில், அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் தொப்பிகள் காணப்பட்டன.
அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாநில எல்லை பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
