/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவிப்பு பலகையால் பயணிகள் குழப்பம்; லேம்ஸ்ராக் பகுதியில் வருகை குறைவு
/
அறிவிப்பு பலகையால் பயணிகள் குழப்பம்; லேம்ஸ்ராக் பகுதியில் வருகை குறைவு
அறிவிப்பு பலகையால் பயணிகள் குழப்பம்; லேம்ஸ்ராக் பகுதியில் வருகை குறைவு
அறிவிப்பு பலகையால் பயணிகள் குழப்பம்; லேம்ஸ்ராக் பகுதியில் வருகை குறைவு
ADDED : அக் 10, 2025 10:11 PM

குன்னுார்; குன்னுாரில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில் ஏற்பட்ட குழப்பத்தால், லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், குன்னுார் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் காட்சி முனைகளில் சென்று இயற்கை காட்சிகளை ரசிக்க ஆர்வத்துடன் செல்கின்றனர்.
தற்போது, டால்பின் நோஸ் காட்சி முனை பகுதி வனத்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, சமவெளி பகுதிகள், நீர்வீழ்ச்சி, இயற்கை நிறைந்த மலை பகுதிகள் ரசிக்க இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், லேம்ஸ்ராக் செல்லும் சாலையையொட்டி, டால்பின் நோஸ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குழப்படைகின்றனர்.
இதே போல, லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சிறிது துாரம் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்படும்.
இதனை அறிந்து, ஊட்டியில் இருந்து டூரிஸ்ட் வேன்களில் அழைத்து வரப்படும் சுற்றுலா பயணிகள், இந்த சாலையில் உள்ள சாக்லெட் தொழிற்சாலைகளுக்கு மட்டும் அழைத்து சென்று திரும்பி விடுகின்றனர்.
லேம்ஸ்ராக் கடை வியாபாரிகள் கூறுகையில்,'கூகுல் வரைபடத்திலும் டால்பின் நோஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல், லேம்ஸ்ராக் காட்சி முனைக்கும் கொடுக்க வேண்டும்.
இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு பலகைகளை மாற்ற வேண்டும்,' என்றனர்.