/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்சை வழிமறித்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த பயணிகள்
/
அரசு பஸ்சை வழிமறித்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த பயணிகள்
அரசு பஸ்சை வழிமறித்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த பயணிகள்
அரசு பஸ்சை வழிமறித்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த பயணிகள்
ADDED : ஜூலை 27, 2025 09:36 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே அரசு பசை வழி மறித்து நின்ற யானைகளால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோத்தகிரி --மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை, செம்மனாரை, தாளமுக்கை மற்றும் கோழித்துறை உட்பட, 15க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. தற்போது, பலா சீசன் என்பதால்,பழங்களை உண்ணுவதற்காக, குட்டிகளுடன் யானைகள் உலா வருவது அதிகரித் துள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் இருந்து, செம்மனாரை பகுதிக்கு யானைகள் சென்றன. குறிப்பிட்ட நேரத்தில், அந்த வழியாக அரசு பஸ் கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
குறுகலான சாலையை வழிமறித்த யானைகள் குட்டிகளுடன் சாலையில் நின்றன. பஸ்சை இயக்காமல் டிரைவர் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்தார். பஸ்சில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரை மணிநேர காலதாமதத்திற்கு பிறகு, யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து பஸ் இயக்கப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'அடிக்கடி, சாலையில் நடமாடும் யானைகளால், அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்க. வனத்துறையினர் கண்காணித்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.