திறந்தவெளியில் நிறுத்தப்படும் குப்பை லாரிகள் துர்நாற்றத்தால் பயணிகள் அவதி
திறந்தவெளியில் நிறுத்தப்படும் குப்பை லாரிகள் துர்நாற்றத்தால் பயணிகள் அவதி
ADDED : செப் 04, 2026 06:23 PM

பந்தலூர் செப்.5–: பந்தலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், குப்பை லாரிகளை நிறுத்தி வைப்பதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சி உட்பட்ட, 21 வார்டுகளிலும், சேகரிக்கப்படும் குப்பைகள் பந்தலூர் இன்ட்கோ தேயிலை தொழிற்சாலையில், எடை போட்ட பின் ஏலமன்னா உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
எடை போடுவதற்காக செல்லும் குப்பை லாரிகளை, கழிவுகளுடன் பந்தலூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கின்றனர்.
கழிவுகள் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் பஸ் ஸ்டாண்டில் ஒழுகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால், பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணிகள், பஸ்சில் பயணிப்பவர்கள் அவதியடைந்துள்ளனர். சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் குப்பை லாரிகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
