/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறுகிய சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள்; அவசர நேரங்களில் அவதிப்படும் பயணிகள்
/
குறுகிய சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள்; அவசர நேரங்களில் அவதிப்படும் பயணிகள்
குறுகிய சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள்; அவசர நேரங்களில் அவதிப்படும் பயணிகள்
குறுகிய சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள்; அவசர நேரங்களில் அவதிப்படும் பயணிகள்
ADDED : ஜூலை 03, 2025 08:02 PM

பந்தலுார்; பந்தலுாரில் இருந்து கேரளா மற்றும் கூடலுார் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும், மேங்கோரேஞ்ச் --முக்கட்டி சாலை குறுகிய சாலையாக இருப்பதால், வாகன போக்குவரத்தின் போது பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் முனீஸ்வரன் கோவில் முதல் உப்பட்டி, குந்தலாடி வழியாக முக்கட்டி செல்லும் சாலை ஒற்றை கிராம சாலையாக உள்ளது. இதனால், வெறும், 3.75 மீட்டர் அகலம் உள்ள இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் வளர்ந்துள்ளதுடன், சாலை ஓரங்களில் குழிகளாக உள்ளன.
இந்த சாலை வழியாக கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநில எல்லை வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், வயநாடு மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களும், நெலாக்கோட்டை, தேவர்சோலை, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
லாரிகள் வருவதால் நெரிசல்
பல கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் வெளிமாநில பயணிகள் பயன்படுத்தும் இந்த சாலை குறுகளாக இருப்பதால் ஒரு வாகன மட்டுமே செல்ல முடியும். இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு, இடம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு பயணிக்கும் சூழல் தொடர்கிறது.
ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்லும்போது நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கேரளா மாநிலம் நிலம்பூர் பகுதியில் இருந்து, 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வரிசையாக வருவதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், 'நாடுகாணி பகுதியில் இருந்து காலை, 10:00 மணி வரையும், மாலை, 4:00 -மணி முதல் 5:00- மணி வரை லாரிகள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தியும் போலீசார் கண்டுகொள்ளாததால், மாணவர்கள் மற்றும் பயணிகள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''இந்த சாலையை முக்கிய மாவட்ட சாலையாக மாற்றி அகலப்படுத்தவும், சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். டிப்பர் லாரிகளை குறிப்பிட்ட நேரங்களில் இயங்க தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.