/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தில் பராமரிப்பில்லாத பஸ்களில் பயணிகள் 'திக் திக்' பயணம்

ADDED : நவ 18, 2025 02:34 AM
குன்னுார்: குன்னுாரில் ஓடும்சில ஓட்டை ஒடிசல் பஸ்களால் பயணிகள் தினமும் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
'குன்னுார்- ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில், 30 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது.
அதில், பெரும்பாலான அரசு பஸ்கள் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுவதால், பயணிகள் தினமும் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். அதில், ஒரு சில பஸ்களில், முன்பக்க கண்ணாடியின் 'பீடிங்' பகுதியில் உடைந்து ஆட்டம் காண்கிறது. இது போன்ற பஸ்களை இயக்குவது புகார்கள் தெரிவிக்கும் போது, கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அந்த பஸ்சை மாற்றி புதிய பஸ்கள் இயக்க வைக்க எந்த முயற்சிகளும் எடுப்பதில்லை.
பட்ஜெட்டில் கோடி கணக்கில் நிதி ஒதுக்கி தமிழகத்தில், 500 க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தும், நீலகிரியில் இது போன்ற பழைய பஸ்கள் மாற்றுவதற்கு விடியல் கிடைக்கவில்லை.
எனவே, இத்தகைய பஸ்களை ஆய்வு செய்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.