/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீண்ட நேரமாக பஸ்களுக்காக காத்திருந்த பயணிகள்; மலை பாதையில் நின்று கொண்டே பயணம்
/
நீண்ட நேரமாக பஸ்களுக்காக காத்திருந்த பயணிகள்; மலை பாதையில் நின்று கொண்டே பயணம்
நீண்ட நேரமாக பஸ்களுக்காக காத்திருந்த பயணிகள்; மலை பாதையில் நின்று கொண்டே பயணம்
நீண்ட நேரமாக பஸ்களுக்காக காத்திருந்த பயணிகள்; மலை பாதையில் நின்று கொண்டே பயணம்
ADDED : ஆக 17, 2025 09:36 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில், 3 நாட்கள் விடுமுறை முடிந்து சுற்றுலா பயணிகள், நேற்று சமவெளி பகுதிகளுக்கு திரும்பியதால், கூட்ட நெரிசலில் பயணிகள் சிரமப்பட்டனர்.
'சுதந்திர தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாள்,' என, மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை காரணமாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னுார் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உட்பட சுற்றுலா மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக மூன்று மணி நேரத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இதேபோல, நேற்று சுற்றுலா பயணிகள் சமவெளி பகுதிகளுக்கு திரும்பியதாலும், மாணவ, மாணவிகள் சமவெளி பகுதிகளில் உள்ள கல்லுாரிக்கு செல்ல ஊட்டி, எல்லநள்ளி, அருவங்காடு, குன்னுார் பகுதி களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இருக்கையில் அமர இடம் கிடைக்காமல் பலரும் மலைப்பாதையில் நின்று கொண்டே பயணம் மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்டுகளில் மணி கணக்கில் காத்திருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் குறைவான பஸ்கள் இயக்கப்படும் நிலையில், கோவை உள்ளிட்ட சமவெளி பகுதி களில் இருந்து, விடுமுறைக்காக கூடுதல் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இது குறித்து போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்,'குன்னுாரில் இருந்து தனியாக, 7 பஸ்கள் இன்று (நேற்று) கூடுதலாக இயக்கப்பட்டது. 'பிளாக் தண்டர்' பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல பஸ்களும் அங்கிருந்து நீலகிரிக்கு வருவதற்கு தாமதமாகியது,' என்றனர்.