/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாட்ரீசியன் சபை ஆண்டு விழா: வசீகரிக்கும் அமைதி பூங்கா
/
பாட்ரீசியன் சபை ஆண்டு விழா: வசீகரிக்கும் அமைதி பூங்கா
பாட்ரீசியன் சபை ஆண்டு விழா: வசீகரிக்கும் அமைதி பூங்கா
பாட்ரீசியன் சபை ஆண்டு விழா: வசீகரிக்கும் அமைதி பூங்கா
ADDED : நவ 02, 2025 10:41 PM

குன்னூர்: பாட்ரீசியன்ஸ் சபை 150வது ஆண்டையொட்டி, குன்னூரில் அமைதி பூங்கா அமைக்கப்பட்டது.
நாட்டில் பாட்ரீசியன்ஸ் சபையின், 150வது ஆண்டு விழாவையொட்டி, குன்னூர் புனித செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரி நுழைவாயிலில் பசுமையான புல்வெளி, மரங்கள், மலர் செடிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.அருட்சகோதரர் பியாஸ், பூங்காவை துவக்கி வைத்தார்.
விழாவில், பள்ளி முதல்வர் ஜான் பிரிட்டோ துவக்கி வைத்து கூறுகையில், பாட்ரீசியன்ஸ்களை கவுரவிக்கும் வகையில், கல்வி, இரக்கம் மற்றும் சமூகத்திற்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக அமைதி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரியின் பூர்வீக தாவரங்கள், உள்ளூர் பல்லுயிர், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்க அமைத்த இந்த பூங்காவில், படிப்பு, பிரார்த்தனை, சிந்தனை மற்றும் முறைசாரா கூட்டம், உரையாடலுக்கு தனிப்பட்ட சிந்தனைக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளது. மாணவர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இயற்கை காற்றை சுவாசிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது, என்றார்.
விழாவில், சபை பிரதர்கள் பெனடிட், ஹென்றி மரிய லூயிஸ், பால், லாரன்ஸ், கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர்.

