/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துவக்கப்பட்ட நிலையில் நடைபாதை பணி நிறுத்தம்; சிரமப்படும் உள்ளூர் மக்கள்
/
துவக்கப்பட்ட நிலையில் நடைபாதை பணி நிறுத்தம்; சிரமப்படும் உள்ளூர் மக்கள்
துவக்கப்பட்ட நிலையில் நடைபாதை பணி நிறுத்தம்; சிரமப்படும் உள்ளூர் மக்கள்
துவக்கப்பட்ட நிலையில் நடைபாதை பணி நிறுத்தம்; சிரமப்படும் உள்ளூர் மக்கள்
ADDED : நவ 17, 2024 10:11 PM

கூடலுார்; கூடலுாரில், கழிவுநீர் கால்வாயுடன் நடைபாதை அமைக்கும் பணி துவங்கப்பட்ட நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சேதமடைந்துள்ளது.
அதில், ஒரு பகுதி சாலை ஓரத்தில், 450 மீட்டர் துாரம் சீரமைக்க, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம், 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பணிக்கான ஒப்பந்தம் பிப்., மாதம் விடப்பட்டது. தேர்தல் மற்றும் பருவமழை போன்ற காரணங்களால் பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் பணிகள் துவங்கப்பட்டது.
இதற்காக, முதல் கட்டமாக சிறிது துாரம் பொக்லைன் மூலம் பழைய நடைபாதை அகற்றப்பட்டு, புதிய நடைபாதை அமைப்பதற்கான பணிகள் நடந்தன.
இப்பணிகளை, கூடுதல், கலெக்டர் கவுசிக் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, திட்டத்தில் மாற்றங்கள் செய்து பணிகளை மேற்கொள்ள உத்தவிட்டனர். நடைபாதை சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கழிவு நீர் கால்வாயுடன் நடப்பாதைஅமைப்பதற்கான பணி, நிறுத்தப்பட்டதால், அப்பகுதியை கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பணிகளை விரைந்து துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில், மாற்றம் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.