UPDATED : மே 01, 2026 08:08 PM
ADDED : மே 01, 2026 08:01 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் அருகே மயில் பறந்து வந்த போது, மின் கம்பியில் சிக்கி 'ஷாக்' அடித்து பரிதாபமாக பலியானது.
கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் அருகே மதியம், 3:50 மணிக்கு, பறந்து வந்து சாலையை கடக்க முயன்ற ஆண் மயில், எதிர்பாராத விதமாக மின் கம்பியில் சிக்கியது. அப்போது 'ஷாக்' அடித்து சாலையில் விழுந்து பலியானது.
அப்பகுதியினர் அதன் உடலை மீட்டு சாலையோரம் வைத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள், இறந்த ஆண் மயிலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆக்கியது.
