/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதையை சீரமைத்தால் பாதசாரிகளுக்கு பெரும் பயன்
/
நடைபாதையை சீரமைத்தால் பாதசாரிகளுக்கு பெரும் பயன்
ADDED : டிச 23, 2024 04:59 AM

கோத்தகிரி 'கோத்தகிரி காமராஜர் சதுக்கம் -ராமசந்த் இடையே, நடைபாதையை விரைந்து சீரமைக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்துள்ளனர்.
நேரு பூங்காவை ஒட்டியுள்ள இச்சாலையில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால்,போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
நடைபாதையில், 'இன்டர்லாக்' கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில், மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டன.
நீண்ட நாட்களாகியும், நடைபாதை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள், சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், நடைபாதை சீரமைப்பு பணியை, விரைந்து முடிக்க வேண்டும்.