/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை ஓரத்தில் அகற்றப்படாத கம்பியால் பாதசாரிகள் பாதிப்பு
/
சாலை ஓரத்தில் அகற்றப்படாத கம்பியால் பாதசாரிகள் பாதிப்பு
சாலை ஓரத்தில் அகற்றப்படாத கம்பியால் பாதசாரிகள் பாதிப்பு
சாலை ஓரத்தில் அகற்றப்படாத கம்பியால் பாதசாரிகள் பாதிப்பு
ADDED : ஆக 10, 2025 09:21 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் மார்க்கெட் இடையே சாலையோர தடுப்பு கம்பிகள் அகற்றப்படாததால், பலர் தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
கோத்தகிரியில் பெருகி வரும் வாகன இயக்கத்திற்கு ஏற்ப, 'பார்க்கிங்' இல்லை. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், அடிக்கடி நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இதனை தவிர்க்க, வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தாதவாறு, போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை ஓரத்தில் இரும்புராடுகள் அமைத்து, கம்பி கட்டப்பட்டுள்ளது. இந்த கம்பிகள் அறுந்துள்ள நிலையில, தொங்கி கிடக்கின்றன. இதனால், சாலையோரத்தில் நடந்து வருபவர்கள், கம்பியில் தடுக்கி விழுந்து காயமடைந்து வருவது தொடர்கிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'நடந்து சென்று வருவோர் நலன் கருதி, இந்த கம்பிகளை முறையாக கட்ட வேண்டும். இல்லாத பட்டத்தில் முழுமையாக அகற்ற வேண்டும்,' என்றனர்.