/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் பாதசாரிகள் அவதி
/
நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் பாதசாரிகள் அவதி
ADDED : நவ 27, 2024 09:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நடைப்பாதையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நடைபாதையின் மேல் புறத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. அடர்ந்து வளர்ந்துள்ள மரக்கிளைகள் நடைபாதையில் தொங்குகின்றன. மழை காலத்தில், மரக்கிளைகள் உடைந்து விழுவதால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் நடைபாதையை தவிர்த்து சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு, அபாயகரமான மரங்களை அகற்றுவதுடன், தொங்கும் கிளைகள், காட்டு செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.