தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்


ADDED : பிப் 16, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூரில் நடந்த அரசு விழாவில், 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான உத்தரவுகளை நீலகிரி எம்.பி., ராஜா வழங்கினார்.

கூடலூர், நர்த்தகி திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் வரவேற்றார். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார்.

விழாவில் நீலகிரி எம்.பி., ராஜா, 'அரசின் மக்கள் நலத்திட்டங்கள், அரசின் வாயிலாக நீலகிரி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள்' குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கினார்

விழாவில், கூடலூர் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பயனாளிகள் பங்கேற்றனர். கூடலூர் தாசில்தார் முத்துமாரி நன்றி கூறினார்.

தொடர்ந்து, நம்மாலக்கோட்டை பகுதியில் 69.50 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக, கூடலூரில், ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய நூலக கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us