/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு கூட்டம்
/
ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு கூட்டம்
ADDED : டிச 01, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 12ல் நடக்கிறது.
அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 12ம் தேதி, காலை, 11:30 மணியளவில், நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின், கடிதம் மூலமாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி, 643001 என்ற முகவரிக்கு, வரும், 8ம் தேதிக்குள் சேர்ப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.