/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 10:11 PM

கோத்தகிரி: கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க வட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பெரியய்யா, செயலாளர் திப்பன் மற்றும் மாவட்ட துணை தலைவர் கருணாகரன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதுடன், 70 வயது முடிந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்;
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகிய, ஓய்வூதியதாரர்களுக்கு குறைப்பட்சம், 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் முழுமையான சிகிச்சை தொகையை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் தயாளன் நன்றி கூறினார்.

