/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு
/
கிராமத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு
கிராமத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு
கிராமத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு
ADDED : மார் 01, 2024 09:56 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே ஊராட்சிக்கு உட்பட்ட, 9-வது வார்டில் குழிவயல், சப்பந்தோடு கிராமங்கள் அமைந்துள்ளன.
இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். வனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், ஊராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர், குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில் கொட்டும் பணி துவக்கப்பட்டது.
அப்போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள், 'மட்கும் குப்பைகள் மட்டுமே இந்த பகுதியில் கொட்டப்படும்; குப்பைகள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்படும்,' என, உறுதி அளித்தனர்.
'பிளாஸ்டிக்' கழிவுகள்
ஆனால், தொடர்ச்சியாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட, அனைத்து கழிவு பொருட்களும் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், இதனை ஒட்டி செல்லும் நீரோடையில் கழிவுகள் கலந்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து வருகிறது.
அத்துடன் யானை உள்ளிட்ட வன விலங்குகளும், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை உட்கொள்வதால், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. இதனால், இந்த பகுதியில் குப்பை கொட்ட பொதுமக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மண்ணில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை புதைப்பதால் மண்ணின் இயற்கை தன்மை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டி வரும், ஊராட்சி நிர்வாகத்துக்கு. மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், 'ஊருக்குள் அரசியல்வாதிகளை நுழைய விடுவதில்லை; தேர்தலில் யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது,' என, எதிர்ப்பு தெரிவித்து, கிராம நுழைவாயில் பகுதியில் பேனர் வைத்து கறுப்பு கொடிகளை கட்டி உள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

