/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் உலா வந்த புலி அச்சத்தில் எல்லையோர மக்கள்
/
சாலையில் உலா வந்த புலி அச்சத்தில் எல்லையோர மக்கள்
ADDED : மார் 05, 2024 09:07 PM

பந்தலுார்:கேரள மாநிலம் பத்தேரி- புல்பள்ளி செல்லும் சாலையில் இரவில் புலி நடமாடுவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டி, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. இங்கு கர்நாடக வனத்தை ஒட்டிய பகுதியில் புல்பள்ளி மற்றும் சுல்தான்பத்தேரி சுற்று வட்டார பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த பகுதியில் அடிக்கடி புலிகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து, வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வருவதுடன் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகின்றன.இதனால், புலியின் அச்சத்தில் இப்போது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்தேரியில் இருந்து புல்பள்ளி செல்லும் சாலையில், இரவு, 8:00 மணிக்கு பாம்பரா எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டி புலி ஒன்று நடந்து சென்றதை சிலர் பார்ததுள்ளனர்.
அதனை சிலர் 'போட்டோ' எடுத்துள்ளனர். தகவல் அறிந்த கேரளா வனத்துறையினர், அப்பகுதியில் முகாமிட்டு, புலி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

