/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைப்பதால் மக்கள் பாதிப்பு
/
நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைப்பதால் மக்கள் பாதிப்பு
நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைப்பதால் மக்கள் பாதிப்பு
நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைப்பதால் மக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 01, 2025 09:43 PM
ஊட்டி; 'ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை குவித்து வைத்து விற்பனை செய்து, பாதசாரிகளுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கமிஷனர் எச்சரித்துள்ளார்.
ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுக்கு சராசரியாக, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றன. நகரில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும், லோயர் பஜார், கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, ஏ.டி.சி., யிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை,' என, முக்கிய சாலையோர நடைபாதைகளில் கடை வைத்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.
இதனால், பொதுமக்கள் நடைப்பாதையை தவிர்த்து சாலையில் நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் சார்பில், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும, சில நாட்களில் ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்து விடுவது வாடிக்கையாகி விட்டது.
பொது மக்கள் கூறுகையில், ' மக்கள் நடமாட இடையூராக உள்ள இடங்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில்,'' நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தனிகுழு அமைத்து மக்கள் நடமாட இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மீண்டும் நகர பகுதகிளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்