/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்லிமந்து அணைப்பகுதியில் குப்பை கழிவுகள் குடிநீர் மாசடைவதால் மக்கள் அச்சம்

ADDED : ஜன 23, 2025 11:09 PM

ஊட்டி; ஊட்டி அருகே மார்லிமந்து அணையை சுற்றி குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, மேல்கோடப்பமந்து உள்ளிட்ட, 7 தடுப்பணைகளிலிருந்து நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், மார்லிமந்து அணையிலிருந்து, 10 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே தடுப்பணை உள்ளது.
திறந்த வெளியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. வெளி நபர்கள் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
அதில், மது அருந்தும் குடிமகன்கள் 'பிளாஸ்டிக்' கழிவுகளை அங்கு வீசி எறிகின்றனர். அதேபோல், சில குடியிருப்பு வாசிகள் குப்பை கழிவுகளை தடுப்பணை அருகே கொட்டி சென்றுள்ளனர். இதனால், தடுப்பணை ஒட்டிய கால்வாய் பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்துள்ளது. மழை சமயத்தில் குப்பை கழிவுகள் அணைப்பகுதிக்கு அடித்து செல்வதால் குடிநீர் மாசடைகிறது. நகராட்சி நிர்வாகம் தடுப்பணையை சுற்றி தடுப்பு அமைத்து அணையை பாதுகாக்க வேண்டும். மேலும், கால்வாயில் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற வேண்டும்.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், '' மார்லிமந்து அணையில் ஆய்வு மேற்கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.