ADDED : ஜூலை 28, 2025 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் அம்பிகாபுரம், கரடிபள்ளம் பகுதிகளில் நேற்று காலை உலா வந்த கரடியால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
குன்னுார் கரடி பள்ளம், அம்பிகாபுரம், ஓட்டுப்பட்டறை சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று உணவு தேடி வந்த கரடி அம்பிகாபுரம் கோவில் அருகே முகாமிட்டிருந்தது.
இதனை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். தகவலின் பேரில், ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், பாரஸ்டர் ராஜ்குமார், கார்டுகள் திலிப், ராம்குமார் உட்பட வனத்துறையினர் கரடியை விரட்டினர். வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.