/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அபாய நிலையில் மின் கம்பம்; அச்சத்தில் மக்கள்
/
அபாய நிலையில் மின் கம்பம்; அச்சத்தில் மக்கள்
ADDED : ஜன 01, 2024 11:38 PM

அன்னுார்;அன்னுாரில் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அன்னுார் கம்பர் வீதியில் 40 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு அருகில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி மின் கம்பம் உள்ளது.
இந்த மின்கம்பம் காற்று மற்றும் மழையால் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பத்திற்கு செல்லும் மின் ஒயர்கள் அருகில் உள்ள வீடுகளை ஒட்டி செல்கிறது. இதனால் அங்கு குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.
அதிக மழை மற்றும் காற்று வீசும் போது கம்பம் சாய்ந்தால் பள்ளி பகுதியில் அல்லது குடியிருப்பு பகுதியிலோ விபரீதம் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் நட வேண்டும். இது குறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், 'கரியாம்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்திலும், அன்னுார் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் விபரீதம் நடக்கும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

