/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிதி பற்றாக்குறையால் திணறும் கீழ்குந்தா பேரூராட்சி: வளர்ச்சி பணி தொய்வால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜன 15, 2024 10:45 PM
மஞ்சூர்:கீழ்குந்தா பேரூராட்சியில் நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர் கீழ்குந்தா பேரூராட்சியில் , 16 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் ஊதிய நிதி இல்லாததால் தடுப்பு சுவர் அமைத்தல், சாலை மேம்பாட்டு பணி, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாதாந்திர கூட்டத்தில் கவுன்சிலர்கள் வளர்ச்சி பணி குறித்து அதிகாரியிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்காததால், பெரும்பாலான வார்டுகளில் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அவசர தேவைக்கு வார்டு பகுதிகள்; சாலைகளில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்ற பொது நிதியை பயன்படுத்துகின்றனர். அந்த நிதியும் முறையாக பராமரிக்கப்படாததால் நிதி பற்றாக்குறையால் பெரும்பாலான வார்டுகளில் புதர் சூழ்ந்து, வனவிலங்கு அச்சத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வார்டு மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
வார்டு மக்கள் கூறுகையில், 'கீழ்குந்தா பேரூராட்சியை பொறுத்த வரை கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை.
புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்,' என்றனர்.