/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: மக்கள் அதிருப்தி
/
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: மக்கள் அதிருப்தி
ADDED : நவ 26, 2025 07:45 AM

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உப்பட்டி- அத்திக்குன்னா சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டிய கிணற்றிலிருந்து, உப்பட்டி மற்றும் அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள், சாலை ஓரத்தில் வெளிப்பகுதியில் போடப்பட்டு உள்ளன.
இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்கும் போது, குடிநீர் குழாய்கள் மீது ஏறி குழாய்கள் அடிக்கடி உடைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய குடிநீர், வீணாக சாலையில் வழிந்தோடி வருகிறது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் குடிநீருக்கு, சிக்கல் ஏற்படும். ஆனால், சாலை ஓரத்தில் மண்ணிற்கு அடியில் புதைக்க வேண்டிய குடிநீர் குழாய்களை, வெறுமனே சாலை ஓரத்தில் மேல் பகுதியில் போடப்பட்டுள்ளதால், அடிக்கடி வாகனங்கள் இதன் மீது ஏறி குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே, குழாய்களை பாதுகாப்பான முறையில் பொருத்த நகராட்சி முன்வர வேண்டும்,' என்றனர்.

