/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதி
/
ஊட்டியில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதி
ADDED : ஜன 25, 2024 01:48 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நவ. மாதம் துவங்கும் உறைபனி ஜன. மாதம் இறுதி வரை தென்படும். சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்ததால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிபொழிவு தாமதமாக துவங்கியது.
அதன்படி டிச.24ம் தேதி தென்பட்ட உறை பனியின் போது 4 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவானது. பின் கடும் மேகமூட்டம் மழையால் உறை பனி தென்படவில்லை. அவ்வப்போது நீர் பனி மட்டும் தென்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ல் தென்பட்ட உறை பனியின் போது 3 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதன்பின் நேற்று வரை குறைந்த பட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாக தொடர்வதால் காலை மாலை நேரங்களில் குளிர் நிலவுகிறது.
நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 22 டிகிரி செல்சியசாக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தால் இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டி தலைகுந்தா காந்தள் அவலாஞ்சி பகுதிகளில் உறை பனிபொழிவு காணப்பட்டது.