/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொன்னுாருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்; நெல்லியாளம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்
/
பொன்னுாருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்; நெல்லியாளம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்
பொன்னுாருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்; நெல்லியாளம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்
பொன்னுாருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்; நெல்லியாளம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜன 29, 2026 05:48 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னுார் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, கிராம மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லியாளம் நகராட்சியின், 20-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொன்னுார் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தி.மு.க.,வை சேர்ந்த ஷீலா என்பவர் கவுன்சிலராக உள்ளார்.
கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், 'நடைபாதை, சாலை, குடி தண்ணீர், தெருவிளக்கு, தடுப்பு சுவர் வசதிகள் செய்து தரப்படவில்லை,' என, கிராம மக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர மறுத்து வருவதாக குற்றம் சாட்டி, நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து மக்கள் தேவைகள் குறித்து நகராட்சி கமிஷனர் சக்திவேலுவிடம் மனு அளிக்கப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'பொன்னுார் கிராமத்தில் கவுன்சிலர், தனக்கு வேண்டியவர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருகிறார். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்லும் நடைபாதை, சாலை, தடுப்பு சுவர் என எந்த தேவைகளையும் செய்ய மறுத்து வருகிறார்.
இதுகுறித்து கேட்கும் மக்களிடம் மிரட்டல் விடும் கவுன்சிலர், மக்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதனால் வேறு வழியின்றி நாங்கள் நகராட்சி கமிஷனரை சந்தித்து, மனு கொடுத்துள்ளோம்,' என்றனர்.
மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கமிஷனர், 'கிராமத்தை நேரில் ஆய்வு செய்து, என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை, என்பது குறித்து அறிய உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்து தரப்படும்,'என்றார். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

