/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்; தமிழகம் --- கேரளா போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்; தமிழகம் --- கேரளா போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்; தமிழகம் --- கேரளா போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்; தமிழகம் --- கேரளா போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 14, 2025 08:11 PM

கூடலுார்; கூடலுார் நாடுகாணி அருகே பொன்னுார் கிராம மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், தமிழகம்-- கேரளா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் அருகே பொன்னூர் கிராமம் உள்ளது. இங்கு, 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம மக்களுக்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில், அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மோட்டார் பழுது காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக, மக்களுக்கு குடிநீர், வழங்கப்படவில்லை. இதற்கு தீர்வு காண மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மழை பெய்தும், மக்கள் குடிநீருக்கு குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டது.
இரு மாநில எல்லையில் மறியல் கடும் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நாள்தோறும் குடிநீர் வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் காலி குடங்களுடன், மாநில எல்லையில் உள்ள கோழிக்கோடு சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வழியாக இயக்கப்படும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டன. பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். போலீசார் கேட்டு கொண்டதால் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதித்தனர்.
தொடர்ந்து, கூடலுார் தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலன்; எஸ்.ஐ., கருப்புசாமி; நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் ஜெயபாலன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும்,' என, உறுதியளித்தனர். அதனை ஏற்றுகொண்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.