தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி புகார் மனு: மாசு கலந்த குடிநீருடன் மனு அளிக்க வந்த மக்கள்

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி புகார் மனு: மாசு கலந்த குடிநீருடன் மனு அளிக்க வந்த மக்கள்

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி புகார் மனு: மாசு கலந்த குடிநீருடன் மனு அளிக்க வந்த மக்கள்


UPDATED : ஜூன் 29, 2026 08:15 PM

ADDED : ஜூன் 29, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 08:15 PM ADDED : ஜூன் 29, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட என்.சி.எம்.,எஸ்., பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மார்லிமந்து அணையிலிருந்து இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாசு கலந்த குடிநீர் வினியோகிப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் , மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் அப்பகுதி பெண்கள் உட்பட ஏராளமானோர் மாசு கலந்த குடிநீரை, 5 லிட்டர் பாட்டிலில் பிடித்து எடுத்து வந்து, கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் அளித்தனர்.

கிராம மக்கள் கூறுகையில், 'மாசு கலந்த குடிநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கடைகளிலிருந்து கட்டணம் கொடுத்து கேன் தண்ணீரை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் நடவடிக்கை எடுக்க கோரி, மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.

* குன்னுார் வண்டிசோலை அம்மன் நகர் வசித்து வரும் மக்கள் குடிநீர் வினியோகம் அடிக்கடி தடைப்படுவதால் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணனிடம் புகார் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us