/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர ஜவுளி கடைகளில் குவியும் மக்கள்: தீபாவளி உடைகளை வாங்க ஆர்வம்
/
சாலையோர ஜவுளி கடைகளில் குவியும் மக்கள்: தீபாவளி உடைகளை வாங்க ஆர்வம்
சாலையோர ஜவுளி கடைகளில் குவியும் மக்கள்: தீபாவளி உடைகளை வாங்க ஆர்வம்
சாலையோர ஜவுளி கடைகளில் குவியும் மக்கள்: தீபாவளி உடைகளை வாங்க ஆர்வம்
ADDED : அக் 17, 2025 11:05 PM

பந்தலுார்: பந்தலுார் மற்றும் கொளப்பள்ளி பகுதிகளில், சாலை ஓர ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஜவுளி எடுக்கும் பணியில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், மாவட்டத்தில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர்.
இதனால், ஆண்டுதோறும் பந்தலூர் மற்றும் கொளப்பள்ளி பகுதிகளில், ஈரோடு, சேலம், கோவை, கேரளா மாநிலம் வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள், சாலை ஓரங்களில் தற்காலிக கடைய அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஜவுளி கடைகளில் விற்பனை செய்யப்படும் துணி ரகங்களின் விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தீபாவளியை கொண்டாடும் மக்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு மக்களும் ஜவுளிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பந்தலுார் மற்றும் கொளப்பள்ளி பகுதிகளில் சாலை ஓர ஜவுளிக்கடைகளை, முற்றுகையிடும் மக்கள், குறைந்த விலையில் கூடுதலான ஜவுளி ரகங்களை மகிழ்ச்சியுடன் எடுத்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.