/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அதிகரட்டியில் திரண்ட மக்கள்
/
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அதிகரட்டியில் திரண்ட மக்கள்
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அதிகரட்டியில் திரண்ட மக்கள்
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அதிகரட்டியில் திரண்ட மக்கள்
ADDED : அக் 17, 2025 11:00 PM
குன்னுார்: குன்னுார் அதிகரட்டி கிராமத்திற்கு நாள்தோறும் காலை, 9:25 மணிக்கு, இயக்கப்படும் அரசு பஸ் கடந்த, 8ம் தேதி முதல் முட்டிநாடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஊர் தலைவர் பெள்ளன், அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பினார்.
தீர்வு கிடைக்காத நிலையில், ஊர் மக்கள் சார்பில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த அறிவித்து, நேற்று முன்தினம் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான மக்கள் போரா ட்டத்துக்கு திரண்டனர். தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி., சுந்தர்ராஜ், டி.எஸ்.பி., நவீன் குமார், இன்ஸ்பெக்டர் நித்யா, ஊட்டி போக்குவரத்து கிளை மேலாளர்கள் அருள் கண்ணன், மணிகண்டன் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணி, தாசில்தார் ஜவகர் உட்பட அதிகாரிகள் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், 'வழக்கம் போல் அதிகரட்டி -ஊட்டி பஸ் இயக்கப்படும்; நீட் டிப்பு இருக்காது,'என, அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்த, போராட்டம் கைவிடப்பட்டது.