/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய குடிநீர் தொட்டி மக்கள் மகிழ்ச்சி
/
புதிய குடிநீர் தொட்டி மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 05, 2026 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டது. பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, பகுதியில் பொன்னானி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்படுத்த கிராமத்திற்கு மத்தியில், குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்த தொட்டி சேதமடைந்து தண்ணீர் விரயமாகி வந்த நிலையில், 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தொடர்ந்து ஊராட்சி மூலம், புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு பயன் ஏற்பட்டு உள்ளது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

