/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் -கலை போட்டிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
/
பொங்கல் -கலை போட்டிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
பொங்கல் -கலை போட்டிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
பொங்கல் -கலை போட்டிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 12, 2025 10:51 PM
ஊட்டி; பொங்கல் பண்டிகை ஒட்டி, அனைத்து தரப்பு மக்களும் பங்குபெறும் வகையில் நடத்தப்படும் கலை போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொங்கல் திருநாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநில அரசின் சார்பில், கோல போட்டி, ஓவிய போட்டி, புகைப்பட போட்டி, ரீல்ஸ் போட்டி, பாரம்பரிய உடை போட்டி, மண்பானை அலங்கரித்தல் போட்டி, கும்பி போட்டி மற்றும் ஆவண படங்கள் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகிறது. அதில், கோல போட்டியில், பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர் மரபுகளை காட்சிப்படுத்தும் கோலங்கள் இடம் பெற வேண்டும். ஓவிய போட்டியில், உழவர் பொங்கல் திருநாள் பற்றிய ஓவியங்களை வரைய வேண்டும்.
புகைப்பட போட்டியில், ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த காட்சிகள், பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகளின் அலங்காரம் போன்றவற்றை சிறந்த முறையில் 'போட்டோ' எடுத்து அனுப்பலாம்.
ரீல்ஸ் போட்டிகளில் ஒரு நிமிடத்திற்குள், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், சிலம்பாட்டம், கரகாட்டம், ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு காளை மாடுகளை தயார் படுத்த வேண்டும்.
மேலும், பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளை பொங்கல் நிகழ்ச்சிகளுடன் ஒரு 'செல்பி' எடுத்து அனுப்பலாம்.
ஆவண பட போட்டியில், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளை குறித்து பதிவுகள் இடம் பெற வேண்டும். பாரம்பரிய உடை போட்டியில், 1 வயது முதல், 13 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும்.
படைப்புகள் அனைத்தும் வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்டதாக இருக்க கூடாது. சுயமான படைப்பாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை, வரும், 20ம் தேதிக்குள், 'tndiprmphongal2025@gmail.com' என்ற மின்னஞ் சலில் அனுப்பலாம்.