/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அஜ்ஜூர் கிராம நில பிரச்னை கலெக்டரை சந்தித்த மக்கள்
/
அஜ்ஜூர் கிராம நில பிரச்னை கலெக்டரை சந்தித்த மக்கள்
அஜ்ஜூர் கிராம நில பிரச்னை கலெக்டரை சந்தித்த மக்கள்
அஜ்ஜூர் கிராம நில பிரச்னை கலெக்டரை சந்தித்த மக்கள்
ADDED : டிச 16, 2025 05:29 AM

ஊட்டி: ஊட்டி அருகே, அஜ்ஜூர் நில பிரச்னை தொடர்பாக, கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
ஊட்டி கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, அஜ்ஜூர் கிராமத்தில், 200 ஆண்டுகளுக்கு மேலாக, 350 குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, மின் இணைப்புடன், பள்ளி சமுதாயக்கூடம் உட்பட, பல்வேறு தேவைகள் அரசு வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்கான வரி கட்டப்பட்டுள்ள நிலையில், 180 வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. 'மீதமுள்ள வீடுகளுக்கு விரைவில் பட்டா வழங்கும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள், கட்டபெட்டு வனசரகத்திற்கு சேர்வதாக கூறி, 2017ல் 140 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வினியோகித்துள்ளது.
அப்போதைய கலெக்டர் அறிவுரைப்படி, நில அளவை செய்யப்பட்டு, 'குறிப்பிட்ட பகுதியில், மக்கள் தொடர்ந்து வசித்து விவசாயம் மேற்கொள்வதற்கு அனுபோகம் வழங்கப்படும்,' என, தெரிவித்தார்.
தொடர்ந்து, கிராம மக்கள் பலமுறை கலெக்டரை சந்தித்து, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தவிர, ஆர்.டி.ஐ., தகவலில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள 'சர்வே' எண்கள் மேய்க்கால் மற்றும் சுடுகாடு என பதிவோடு சர்க்கார் புறம்போக்கு நிலம் என்ற பதிவுடன், அரசு நிலம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், வனத்துறை பிரச்னையிலிருந்து முழுமையாக தங்களை விடுவித்து, பட்டா வழங்க கோரி, கிராம மக்கள் மீண்டும் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'கிராம நிலம் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக கலெக்டரை சந்தித்தோம். மாவட்ட வன அலுவலர் முன்னிலையில், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்,' என்றனர்.

