/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் அன்னுார் மக்கள் தவிப்பு
/
தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் அன்னுார் மக்கள் தவிப்பு
தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் அன்னுார் மக்கள் தவிப்பு
தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் அன்னுார் மக்கள் தவிப்பு
ADDED : பிப் 27, 2024 11:11 PM
அன்னுார்;அன்னுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அன்னுார் பஸ் ஸ்டாண்டில், தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதில் மேட்டுப்பாளையத்திலிருந்து, அன்னுார் வழியாக அவிநாசி, திருப்பூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர்.
அதேபோல் அவிநாசியில் இருந்து, அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும் தடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். மேலும், கோவையிலிருந்து அன்னுார் வழியாக சத்தி செல்லும் பஸ்கள் ஓதிமலை ரோட்டுக்கு செல்லாமல் நேரடியாக பஸ்கள் வெளியே வரும் பகுதியிலேயே உள்ளே நுழைகின்றன. இந்த மூன்று விதிமீறல் களால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் முன்பும், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கைகாட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசு பஸ்களை பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும்படி செய்ய வேண்டும்.
போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ்கள் உள்ளே வந்து செல்லும்படியும் பஸ் ஸ்டாண்டுக்கு முன்பு வாகனங்களை நிறுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

