/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்களை தேடி மருத்துவம் 1.89 லட்சம் பேர் பயன்
/
மக்களை தேடி மருத்துவம் 1.89 லட்சம் பேர் பயன்
ADDED : ஏப் 18, 2025 11:55 PM
ஊட்டி: நீலகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.89 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மாநில அரசு மருத்துவ சேவையை அனைத்து பகுதிகளிலும் சென்றடையும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்ட மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது நீலகிரியில், 2021 ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 45 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், இயன்முறை மருத்துவ சேவைகள் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில், 218 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 5 நோய் ஆதரவு செவிலியர்கள், மற்றும் ஐந்து இயன்முறை மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இத்திட்டத்தில் தற்போது வரை, 1.89 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

