/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ப்பு நாயை இரவில் கவ்வி சென்ற சிறுத்தையால் ஊட்டி மக்கள் பீதி
/
வளர்ப்பு நாயை இரவில் கவ்வி சென்ற சிறுத்தையால் ஊட்டி மக்கள் பீதி
வளர்ப்பு நாயை இரவில் கவ்வி சென்ற சிறுத்தையால் ஊட்டி மக்கள் பீதி
வளர்ப்பு நாயை இரவில் கவ்வி சென்ற சிறுத்தையால் ஊட்டி மக்கள் பீதி
ADDED : ஆக 19, 2025 09:14 PM

ஊட்டி:
ஊட்டி கிளன்ராக் பகுதியில் இரண்டு மாதங்களில், 8 நாய்களை சிறுத்தை கவ்வி சென்றதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே கிளன்ராக் குடியிருப்பு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பால் என்பவரின் குடியிருப்பில் நுழைந்த சிறுத்தை, ஜெர்மன் ஷெப்பர்டு நாயை கவ்வி சென்ற காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இப்பகுதிக்கு அடிக்கடி வரும் சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அப்பகுதியில், 8 நாய்களை சிறுத்தை கவ்வி சென்றுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் கிளன்ராக் குடியிருப்பு வாசிகள் பீதியில் உள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த நிதின்சேகர் கூறுகையில்,'' இப்பகுதியில் கடந்த சிலமாதமாக கரடி, சிறுத்தை உலா வருகின்றன. தாவரவியல் பூங்கா அருகே உள்ள இப்பகுதியில் உலா வருவதால், புதரில் உள்ள வன விலங்குகளால் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.