/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு
/
ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு
ADDED : அக் 27, 2025 10:11 PM
ஊட்டி: கத்தோலிக்க ஆலயமான தூய மோட்சராக்கிணி ஆலயத்தில், அன்னை மரியாவுக்கு ஆயிரம் மணி ஜெபமாலை வழிபாடு நடந்தது.
அக்., மாதம் முழுவதும், அன்னையின் புகழை போற்றி துதிக்கவும், விழாவை சிறப்பிக்கவும் உலகம் முழுவதும் ஜெபமாலை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெபமாலை குழுவினர் நாள்தோறும் காலை, 6:00 மணிக்கும் மாலை, 5:00 மணிக்கு, அன்பிய குழுக்கள் ஜெபமாலை வழிபாட்டை சிறப்பித்து வருகின்றனர்.
காலை, 6:45 மணிக்கு, பங்கு குரு ஞானதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, பங்கு குரு பெனடிக்ட் ஆயிரம் மணி ஜெபமாலை சிறப்பு வழிப்பாட்டை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு திருப்பலி மற்றும் அன்னையின் சிறப்பு ஆசீர் வழங்கப்பட்டது.
இதில், ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

