தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் முற்றுகை போராட்டம்

 ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் முற்றுகை போராட்டம்

 ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் முற்றுகை போராட்டம்


ADDED : ஏப் 24, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் சீரான குடிநீர் வினியோகம் கிடைக்காததால், ஆத்திரம் அடைந்த மக்கள், நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டியில், சீசன் நாட்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நகராட்சியில், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு படி, 86 ஆயிரம் மக்கள் வசித்த நிலையில், தற்போது மக்கள் தொகை, ஒரு கோடியை தாண்டி உள்ளதாக தெரிகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.

நடப்பாடில், மழை பொய்த்த நிலையில், அணைகளில் தண்ணீர் வரத்து, வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பகுதி மக்கள், 'சீரான தண்ணீர் வினியோகிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண இருப்பதாக, நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனவே, பணம் கொடுத்து, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மக்கள் கூறுகையில், 'தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோ, எளிய கூலி வேலை செய்பவர்கள். இவர்களால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம், 35,36 வார்டுகளின் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us