/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் சாலையோர ஜவுளி கடைகளை நாடிய மக்கள்
/
பந்தலுாரில் சாலையோர ஜவுளி கடைகளை நாடிய மக்கள்
ADDED : அக் 29, 2024 08:50 PM

பந்தலுார்: பந்தலுாரில் சாலையோர ஜவுளி கடைகளை நாடிய மக்கள் குறைந்த விலையில் துணிகளை அள்ளி செல்கின்றனர்.
பந்தலுார் பகுதியில் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, சாலை ஓரங்களில் தற்காலிக துணிக்கடைகள் அதிகளவில் துவக்கப்பட்டு ஜவுளி விற்பனை சூடு பிடிப்பது வழக்கம்.
நடப்பாண்டு பஜார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட தற்காலிக ஜவுளிக்கடைகள் துவக்கப்பட்டன. கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும், வியாபாரிகள் பெரிய ஜவுளி கடைகளில் இருந்து மொத்தமாக துணிராகங்களை வாங்கி வந்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
இதனால், தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் குறைந்த விலையில் கிடைத்த ஜவுளி ரகங்களை அள்ளி செல்கின்றனர். இதனால், நிரந்தரமாக செயல்படும் ஜவுளி கடைகளில், மக்களின் கூட்டம் குறைந்து விற்பனை வெகுவாக குறைந்து காணப்பட்டது.