/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீருக்கு திண்டாடும் மக்கள்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
/
குடிநீருக்கு திண்டாடும் மக்கள்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
குடிநீருக்கு திண்டாடும் மக்கள்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
குடிநீருக்கு திண்டாடும் மக்கள்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
ADDED : ஜன 22, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் காட்டேரி பூங்கா பகுதி; வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த இடத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீருக்காக ரன்னிமேடு அருகே ஊற்று நீர் மற்றும் ரயில் நிலைய குழாய்களில் இருந்து குடிநீர் பிடித்து, மேடான பகுதியில் குடங்களில் சுமந்து கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த போதும், அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
மக்கள் கூறுகையில், 'கிராமத்திற்கு தடையின்றி குடிநீர் வழங்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.