/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அருகே நடைபாதை குழியில் தடுக்கி விழும் மக்கள்; சீரமைக்க நடவடிக்கை தேவை

ADDED : ஜன 21, 2025 11:28 PM

கோத்தகிரி; ஊட்டி அருகே நடைப்பாதையில் ஏற்பட்டுள்ள குழியால், மக்கள் தடுக்கி விழுந்து வரும் அவலம் தொடர்கிறது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, தொதநாடு கம்பட்டி கிராமத்தில், 250 வீடுகளில், 3,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் இருந்து, தாழ்வான பகுதியில் உள்ள சாலையை அடைந்து அங்கிருந்து வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அதற்காக, கழிவுநீர் கால்வாயுடனான நடைப்பதையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கழிவு நீர் கால்வாய் அடைப்பட்ட நிலையில், 'ஸ்லேப்' அகற்றப்பட்டது. ஆனால், பணி துவக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், நடைபாதையில் ஏற்பட்ட குழியை கடந்து, மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரங்களில் பலர் தடுக்கி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பி உள்ளனர். அத்துடன், தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.