/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லவ்டேல் பகுதியில் அபாயகர மரங்கள்; வனத்துறை அகற்ற வலியுறுத்தல்
/
லவ்டேல் பகுதியில் அபாயகர மரங்கள்; வனத்துறை அகற்ற வலியுறுத்தல்
லவ்டேல் பகுதியில் அபாயகர மரங்கள்; வனத்துறை அகற்ற வலியுறுத்தல்
லவ்டேல் பகுதியில் அபாயகர மரங்கள்; வனத்துறை அகற்ற வலியுறுத்தல்
UPDATED : ஏப் 16, 2025 07:13 AM
ADDED : ஏப் 15, 2025 09:09 PM

ஊட்டி,; 'லவ்டேல் பகுதியில் இரு புறம் ஓங்கி வளர்ந்துள்ள அபாயகரமான கற்பூரம் மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் இருந்து லவ்டேல் சந்திப்பு வழித்திடத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
குறிப்பாக, லவ்டேல் சந்திப்பில் நுாறு ஆண்டு பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் இருபுறமும் வானுயர்ந்து காணப்படுகிறது.
மழை மற்றும் பலத்த காற்றுக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து தடைப்படுகிறது. அன்னிய மரங்கள் பட்டியலில் உள்ள கற்பூர மரங்களை ஐகோர்ட் உத்தரவுப்படி, வனத்துறையினர் படிப்படியாக அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், 'லவ்டேல் சந்திப்பில் இருபுறமும் ஓங்கி வளர்ந்துள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டும்,' என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்குள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
பயணிகள் கூறுகையில், 'இப்பகுதிகளில் அபாயகரமாக உள்ள மரங்களை வனத்துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பருவமழைக்கும் முன்பாக அகற்ற வேண்டும்,' என்றனர்.

