/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காணாமல் போன நடைபாதை சாலையில் நடமாடும் மக்கள்
/
காணாமல் போன நடைபாதை சாலையில் நடமாடும் மக்கள்
ADDED : பிப் 22, 2024 06:27 AM
குன்னுார்: குன்னூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றி மக்கள், மாணவ, மாணவியர் நடந்த சென்ற நடைபாதையை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பெட்போர்டு வரையிலான பகுதியில் உள்ள, 'தந்தி மாரியம்மன் கோவில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அரசு மருத்துவமனை, பள்ளிகள், மார்கெட், வங்கிகள்,' என, அனைத்திற்கும் செல்லும் முக்கிய வழித்தடமாக மவுன்டரோடு அமைந்துள்ளது.
அதில், சாலை ஓரத்தில் மக்கள் நடந்து செல்ல தனியாக நடைபாதை இருந்தது. இதனால் மக்கள், பள்ளி மாணவ, மாணவியர் நடந்து செல்ல பயனுள்ளதாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நடந்த நடைபாதை ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலையில் மக்கள் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காண வேண்டிய மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், 'இது தங்களது எல்லைக்கு வராது,' என கூறி மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.
தன்னார்வலர் டேவிட் கூறுகையில்,'' நீலகிரி மாவட்டம் முழுவதும், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பால், சாலையில் பாதசாரிகள் நடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதைகளை மீட்க வேண்டும்,''என்றார்.