/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம் கார்டுகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
/
சிம் கார்டுகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
சிம் கார்டுகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
சிம் கார்டுகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
ADDED : ஆக 20, 2025 09:18 PM
கூடலுார்; அடிக்கடி மொபைல் போன் சிக்னல் தடைப்படுவதாக கூறி, சேரம்பாடியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சிலர், சிம் கார்டுகளை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் நேற்று, காலை பல மணி நேரம் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சிக்னல் தடைபட்டதால், வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், அதிருப்தி அடைந்த சேரம்பாடியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சிலர், நேற்று பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளை சந்தித்து, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டுகளை ஒப்படைக்க முயன்றனர். அவற்றை வாங்க மறுத்து அதிகாரி,'கோழிக்கோடு -நிலம்பூர் சாலையில், கேபிள் சீரமைப்பு பணி நடப்பதல், தற்காலிகமாக சிக்னல் தடைப்பட்டது. சீரமைத்த பின் உடனடியாக சிக்னல் சீராகும்.
எனவே, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டுகளை அனைவரும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தினார். இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் திரும்பி சென்றனர்.