பாதியில் விடப்பட்ட நிழல்குடை பணி: விரைந்து முடித்தால் மக்களுக்கு பயன்
பாதியில் விடப்பட்ட நிழல்குடை பணி: விரைந்து முடித்தால் மக்களுக்கு பயன்
UPDATED : மே 14, 2026 07:22 PM
ADDED : மே 14, 2026 07:11 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் -ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஹெல்த்கேம் அருகே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நிழல் குடை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், பயணிகள், திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறி சென்றனர். இந்நிலையில், கூடலுார் நகராட்சி சார்பில், சேதமடைந்த நிழல் குடை இடிக்கப்பட்டு புதிய நிழல் குடை அமைப்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பயணிகள் திறந்த வெளியில் காத்திருந்து பயணத்தை தொடர்கின்றனர். எனவே, பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, நடப்பாண்டு பருவமழை துவங்கும் முன்பு நிழல் குடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
