/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
/
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 07, 2025 09:00 PM

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை அஞ்சுகுன்னு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் தேவர்சோலை பேரூராட்சி, 5ம் வார்டுக்கு உட்பட்ட அஞ்சுக்குன்னு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பேரூராட்சி சார்பில் சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதிகளை செய்து தர வலியுறுத்தி வந்தனர்.
இதற்கான நடவடிக்கை இல்லாததால், அஞ்சுகுன்னு அருகே உள்ள, மாங்குன்னு பகுதியில் நேற்று, காலை முதல் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, பேரூராட்சி கவுன்சிலர் ஜோஸ் தலைமை வகித்தார். அதில், 'கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேவர்சோலை, செயல் அலுவலர் பிரதீப்குமார் சந்தித்து, 'பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்தார். அதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.