/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்களின் வரி பணத்தில் நகராட்சியால் வீணடிக்கப்படும் நிதி! இடத்தை பாதுகாத்து பூங்கா அமைத்தால் பயன்
/
மக்களின் வரி பணத்தில் நகராட்சியால் வீணடிக்கப்படும் நிதி! இடத்தை பாதுகாத்து பூங்கா அமைத்தால் பயன்
மக்களின் வரி பணத்தில் நகராட்சியால் வீணடிக்கப்படும் நிதி! இடத்தை பாதுகாத்து பூங்கா அமைத்தால் பயன்
மக்களின் வரி பணத்தில் நகராட்சியால் வீணடிக்கப்படும் நிதி! இடத்தை பாதுகாத்து பூங்கா அமைத்தால் பயன்
ADDED : செப் 11, 2024 10:13 PM

குன்னுார், : குன்னுார் உழவர் சந்தை அருகே உள்ள இடத்தில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
குன்னுார் உழவர் சந்தை அருகில் நகராட்சிக்கு சொந்தமான, 2 ஏக்கர் இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பலர் ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டனர். இதற்கு தீர்வு காண, 2015ம் ஆண்டில் அ.தி.மு.க., ஆட்சியின் போது, நகராட்சியில் நிதி ஒதுக்கி பூங்காவாக மாற்றப்பட்டது.
ரூ.1.49 கோடியில் மையம்
தொடர்ந்து, பூங்காவில் பராமரிப்பு இல்லாததால், மீண்டும் ஆக்கிரமிப்பு துவங்கியது. இதனால், கடந்த, 2018ம் ஆண்டு, 1.49 கோடி ரூபாய் மதிப்பில், நுண்ணுயிரி செயலாக்க மையம் அமைக்கப்பட்டு நள்தோறும், 400 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. இதன் டெண்டர் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த மையம் மூடப்பட்டு ஒட்டுப்பட்டறை மையத்துக்கு மாற்றப்பட்டது.
மீண்டும் அப்பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அந்த இடத்தில் நகராட்சியின் பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதில், நகராட்சியின் பொக்லைன் ஒன்றும் குப்பை போல போடப்பட்டுள்ளது. அங்கு, 25 லட்சம் ரூபாய் செலவில் தற்போது நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
மீண்டும் ஆக்கிரமிப்பு அபாயம்
இதன் அருகில் நீரூற்றும் உள்ளதால், அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய நகராட்சி வழி வகை செய்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு குரல் கொடுக்க வேண்டிய எதிர்கட்சியை சேர்ந்த,அ.தி.மு.க., கவுன்சிலர்களும் மவுனம் சாதிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் முபாரக் கூறுகையில், ''அந்த இடத்தை வைத்து மக்களின் வரி பணத்தை வீணடிக்க கூடாது. பாம்பு, விஷ பூச்சிகள் அதிகம் உள்ள இடமாகவும், திறந்த நிலையில் உள்ள கிணறு உள்ள இடமாகவும் உள்ளது. இங்கு ஏற்கனவே காட்டெருமை விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
நீரூற்று உள்ள இந்த இடத்தில், மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலச்சரிவு அபாயமுள்ள இந்த இடத்தில், அரசு திட்டங்கள் பெயரில் மீண்டும் கட்டடங்கள் கட்ட தடை விதிக்கவும் வேண்டும். அந்த இடத்தை தோட்டக்கலை துறையிடம் ஒப்படைத்து மீண்டும் பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும்,'' என்றார்.
பூங்காவாக மாற்ற ஆய்வு
குன்னுார் நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், ''குன்னுாரை பொறுத்தவரை நகராட்சி இடம் இல்லாததால் நுாலகம் கூட அமைக்கப்படவில்லை. வேறு இடம் இல்லாததால், குறிப்பிட்ட இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. எக்காரணம் கொண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காத வகையில் பாதுகாக்கப்படும். நீரூற்று உள்ள இடம் பாதுகாத்து சுற்றுப்புற பகுதிகளில் பூங்காவாக மாற்ற ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.