/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் இன்று வாசனை திரவிய கண்காட்சி துவக்கம்
/
கூடலுாரில் இன்று வாசனை திரவிய கண்காட்சி துவக்கம்
ADDED : மே 09, 2025 05:50 AM

கூடலுார்; கூடலுாரில் கோடை விழா மற்றும் வாசனை திரவிய கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
கூடலுார் மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் நடக்கும் கண்காட்சியில், வாசனை திரவிய பொருட்களை பயன்படுத்தி, குன்னுார் ரயில்வே ஸ்டேஷன், வண்ணத்துப்பூச்சி, நாட்டின் வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கு அமைக்கப்பட்டுள்ள, 51 ஸ்டால்களில் பல்வேறு வாசனை திரவிய பொருட்கள், அதன் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு வரும் பெரியவர்களுக்கு, 10 ரூபாய், சிறியவர்களுக்கு, 5 ரூபாய் என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இன்று, காலை, 11:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் விழா துவங்குகிறது.